இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ

பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 9 துவங்கி இரண்டு கடந்துவிட்டது. இதுவரை மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
முதல் வாரம் இடையிலேயே நந்தினி வெளியேறினார். இதை தொடர்ந்து மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி முதல் வாரம் எவிக்ஷன் செய்யப்பட்டார்.
இவருடைய எலிமினேஷனை தொடர்ந்து, அப்ஸரா சிஜே கடந்த வாரம் மூன்றாவது போட்டியாளராக வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்த வாரம் நாமினேஷன்
தற்போது வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இதில், அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியானா ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.