இந்த சீரியலும் முடியப்போகிறதா.. சன் டிவி ரசிகர்கள் கடும் ஷாக்

சன் டிவி தான் தற்போது தமிழ் சின்னத்திரையில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று நம்பர் 1 சேனல் ஆக இருந்து வருகிறது.
டாப் 5 சீரியல்கள் பட்டியலில் சன் டிவி தொடர்கள் தான் அதிகம் இடம் பிடித்து வருகின்றன. விரைவில் புதுப்புது சீரியல்களை களமிறக்க சன் டிவி திட்டமிட்டு வருகிறது.
துளசி, இரு மலர்கள், பராசக்தி என மூன்று புது சீரியல்கள் வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முடிக்கப்படும் முக்கிய சீரியல்
இந்நிலையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் இலக்கியா சீரியல் விரைவில் முடிக்கப்பட இருக்கிறதாம். விரைவில் இதன் கடைசி எபிசோடு வரும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆனந்த ராகம் சீரியல் முடிய போவதாக ஒரு வாரத்திற்கு முன்பே செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.






