இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. விஜய் கடும் வேதனையுடன் பதிவு

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. விஜய் கடும் வேதனையுடன் பதிவு


கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி ஆகி இருக்கின்றனர். மேலும் 60 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. விஜய் கடும் வேதனையுடன் பதிவு | Karur Stampede Vijay Condolence Message

விஜய் பதிவு

இந்நிலையில் விஜய் இந்த துயர சம்பவத்தால் இதயம் நொறுங்கி இருப்பதாக கூறி இருக்கிறார்.

“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.”



“கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என விஜய் பதிவிட்டு இருக்கிறார்.
 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *