இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தனுஷின் இட்லி கடை

நடிகராக மட்டுமின்றி சமீபகாலமாக இயக்குநராகவும் சிறந்து விளங்கி வருகிறார் தனுஷ். சென்ற ஆண்டு ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளிவந்தது.

இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Idly Kadai New Release Date

ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. நான்காவதாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புதிய ரிலீஸ் தேதி

இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இது தனுஷ் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது.

இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Idly Kadai New Release Date

இந்த நிலையில், தற்போது படக்குழுவினர் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி இட்லி கடை வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த அறிவிப்பு..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *