ஆர்த்தி பிரச்சனைக்கு நடுவில் ரவி மோகன் தொடங்கும் புது விஷயம்

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இரண்டு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
அது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நீதிமன்றம் அறிக்கை வெளியிட தற்போது தடை போட்டிருக்கிறது. அதனால் தற்போது இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.
படம் இயக்கும் ரவி மோகன்
ரவி மோகன் இதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் தான் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகப்போவதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி அவர் யோகி பாபுவை வைத்து படம் இயக்கப்போகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்க போவதாக நடிகர் யோகிபாபு தெரிவித்து இருக்கிறார்.