ஆதர்ஷ குடும்பம் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


Aadarsha Kutumbam House No: 47 – AK47 Box office: ஆதர்ஷ குடும்பம் திரைப்படம் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியான நிலையில், இதுவரை 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.



ஆதர்ஷ குடும்பம்


தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47 – AK 47. இப்படத்தை முன்னணி இயக்குநரான திரிவிக்ரம் இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: ஆதர்ஷ குடும்பம் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Aadarsha Kutumbam 2 Days Box Office



இப்படத்தில் ஸ்ரீநிதி, யுவினா பார்த்தவி, நிவேதா பெத்துராஜ், சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஆதர்ஷ குடும்பம் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Aadarsha Kutumbam 2 Days Box Office


பாக்ஸ் ஆபிஸ்


ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும், அப்படத்தின் வசூல் விவரங்களை நாம் பார்ப்போம். அந்த வகையில், ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47 – AK 47 திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஆதர்ஷ குடும்பம் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Aadarsha Kutumbam 2 Days Box Office


அதன்படி, இப்படம் ஆந்திராவில் ரூ. 10.75 கோடி, தெலுங்கானாவில் ரூ. 9.25 கோடி, கர்நாடகாவில் ரூ. 3.1 கோடி, இந்தியாவின் மற்ற இடங்களில் (Rest Of India) ரூ. 1.1 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ. 11.5 கோடி என மொத்தமாக உலகளவில் ரூ. 35.7 கோடி வசூல் செய்துள்ளது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *