அவர் என் மகள் மாதிரி.. 20 வயது சாரா பற்றி இயக்குனர் விஜய் சொன்ன விஷயம்

இயக்குனர் விஜய் இயக்கிய சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் சாரா அர்ஜுன்.
தற்போது 20 வயதாகும் சாரா அர்ஜுன் ஹீரோயினாக அறிமுகம் ஆகி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அவர் நடித்த துரந்தர் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.
மகள் மாதிரி
இந்நிலையில் இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் சாராவின் வளர்ச்சி பற்றி பேசி இருக்கிறார். “அவர் என் மகள் மாதிரி, ஒவ்வொரு முறை தேர்வு முடிந்து விடுமுறை என்றாலே என் வீட்டுக்கு வந்துவிடுவார்”.
“அவர் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆனது எனக்கு பெருமை. அவள் என்னை மாமா என அழைத்தாலும், அவள் எனக்கு மகள் மாதிரி தான்”.






