அறிவுக்கரசி கையில் வீடியோ.. குணசேகரனை மாட்டி விடுவாரா! – எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தள்ளிவிட்டதில் அவர் தலையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் கோமாவில் இருக்கிறார்.
அவரை தாக்கியது யார் என்பது அவர் ரெக்கார்ட் செய்த வீடியோ வெளியில் வந்தால் எல்லோருக்கும் தெரிய வரும்.
நாளைய ப்ரோமோ
இந்நிலையில் தற்போது நாளைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அறிவுக்கரசி ஈஸ்வரி வீடியோவை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். அந்த நேரத்தில் போலீஸ் வந்து கதவை தட்டுகிறார்.
அவர் அந்த வீடியோவை மறைத்து வைத்துவிடுவாரா அல்லது அந்த வீடியோ பெண்களிடம் சிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.