அய்யனார் துணை சீரியலில் நிலா-சோழனாக நடிப்பவர்கள் வாங்கும் சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களால் ஆஹா சூப்பர் சீரியல் என கொண்டாடப்படும் சீரியல் தான் அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இப்போது முக்கியமான கதைக்களம் ஒளிபரப்பாகிறது. பணம் கொடுக்காததால் அந்த இடத்தில் அசிங்கப்பட்டதற்கு நிலா சோழனிடம் கூறி கதறி அழுகிறார்.
அவரின் அழுகையை தாங்க முடியாமல் சோழன் தான் வேலை பார்க்கும் ஓனரிடம் இருந்து பணம் திருடிவிடுகிறார். எப்படியோ இன்றைய எபிசோடில், நிலா பணத்தை திருப்பி ஓனரிடம் கொடுத்த சோழனை வெளியே கொண்டு வருகிறார்.
பின் சோழனிடம் யார் என்னை என்ன சொன்னால் என்ன நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என கூறி வருத்தப்படுகிறார்.
சம்பளம்
அய்யனார் துணை சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஜோடி தான் நிலா-சோழன். Nizhan என்ற டாக்கில் இந்த ஜோடிக்கு நிறைய போட்டோஸ், வீடியோக்கள் எல்லாம் இன்ஸ்டாவில் வலம் வருகிறது.
ரசிகர்களின் பேவரெட் ஜோடியாக வலம் வரும் நிலா-சோழன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா மற்றும் அரவிந்த் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது.
அய்யனார் துணை சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மதுமிதா ரூ. 35,000 முதல் 40,000 ஆயிரம் சம்பளம் பெறுவதாகவும், சோழனாக நடிக்கும் அரவிந்த் ரூ. 20,000 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.






