அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தது போல ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் இருக்கிறான் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரியும் நேரம் வந்துவிட்டது.
க்ரிஷ் தற்போது முத்துவின் வீட்டில் இருக்கும் நிலையில் ரோகிணி அவனை ரகசியமாக பார்த்துக்கொள்கிறார். அவன் தனது மகன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என படாத பாடு படுகிறார்.
ரோகிணியை தற்போது போலீஸ் பிடித்துக்கொண்டு போன நிலையில் க்ரிஷ் உருக்கமாக ஒரு கோவிலில் நின்று கண்ணீருடன் வேண்டிக்கொண்டிருப்பதை முத்துவின் அப்பா மற்றும் தம்பி இருவரும் பார்த்துவிடுகின்றனர்.
அடுத்த வார ப்ரோமோ
அவனிடம் சென்று என்ன செய்கிறாய் என கேட்டதற்கு தனது அம்மாவுக்காக வேண்டுவதாக சொல்ல்கிறான், அதன் பின் சுதாரித்துக்கொண்டு ஆண்ட்டி ஜெயிலுக்கு போயிட்டாங்க அவருக்காக வேண்டுகிறேன் என சொல்கிறான்.
அதன் பின் ரோகிணி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வரும்போது கிரிஷ் வேகமாக சென்று கட்டிபிடித்து கொள்கிறான். “அம்… ஆண்ட்டி வந்துடீங்களா” என கிரிஷ் சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் பார்க்கிறது.
இந்த முறையாவது ரோகிணி சிக்குவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.