அம்மாவை சந்தித்த பல்லவன்.. கோபத்தில் கொந்தளித்த நடேசன்..

அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மாவை கண்டுபிடிக்க நிலா மற்றும் சோழன் இருவரும் முயற்சி செய்து வந்தனர். இரண்டு முறை பல்லவனின் அம்மாவை பார்த்தும், அவர் எங்கு இருக்கிறார் என நிலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் சோழனிடம் இதை சொல்லி, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க கூறினார் நிலா. அதன்படி, முயற்சி செய்து வந்த சோழன் இறுதியாக பல்லவன் அம்மா இருக்கும் வீட்டை கண்டுபிடித்துவிட்டார்.
அம்மாவை சந்தித்த பல்லவன்
இந்த நிலையில், அவரை பல்லவனிடம் அழைத்து வந்துள்ளனர். தனது அம்மாவை சிறு வயதில் இருந்து பார்க்காமல் வளர்ந்த பல்லவன், தற்போது முதல் முறையாக பார்த்தவுடன் மகிழ்ச்சியில் உறைந்துபோய்விட்டார்.
ஆனால் பல்லவனின் அம்மா வீட்டிற்கு வந்தது நடேசனுக்கு பிடிக்கவில்லை. இதன்பின் மிகப்பெரிய பிரச்சனைகளை எல்லாம் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் என கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறார் நடேசன். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






