அம்மாவின் தியாகம், அப்பா இருந்திருக்கணும்.. நடிகர் அஜித் குமார் உருக்கம்

அம்மாவின் தியாகம், அப்பா இருந்திருக்கணும்.. நடிகர் அஜித் குமார் உருக்கம்


அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் ரிலீஸ் செய்வதற்கு ரெடியாக உள்ளது.

சினிமா மட்டுமின்றி இப்போது தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

அம்மாவின் தியாகம், அப்பா இருந்திருக்கணும்.. நடிகர் அஜித் குமார் உருக்கம் | Ajith Kumar Emotional Speech

சூழல் இவ்வாறு இருக்க அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்நிலையில், அஜித் குமார் உருக்கமாக பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உருக்கம் 

அதில், ” இந்த விருது என்னுடையது மட்டுமில்லை இதில் பலரின் உழைப்பு உள்ளது. நான் இந்த இடத்தில் மறைந்த என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் அம்மா என் மீது வைத்த அன்புக்கும் அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவியும், தோழியுமான ஷாலினி தான் என் பக்கபலம்.

அம்மாவின் தியாகம், அப்பா இருந்திருக்கணும்.. நடிகர் அஜித் குமார் உருக்கம் | Ajith Kumar Emotional Speech

என் குழந்தைகள் தான் எனது பெருமை. மேலும், இவை அனைத்திற்கும் என்னுடன் நின்ற என் அன்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.        


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *