அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ராட்சசன் 2..! வெறித்தனமான அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

ராட்சசன்
உலகளவில் தலைசிறந்த சைக்கோ திரில்லர் திரைப்படங்களில் ஒன்று ராட்சசன். 2018ம் ஆண்டு வெளிவந்த இப்படம் அனைவரையும் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. இப்படி ஒரு திரில்லர் படத்தை எடுக்க முடியுமா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் அமலா பால், முனீஸ்காந்த், அம்மு அபிராமி, காளி வெங்கட் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராட்சசன் 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
வெறித்தனமான அப்டேட்
இந்த நிலையில், தனது தம்பி நடிக்கும்
ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரோமோஷனில் பேசிய விஷ்ணு விஷால், அடுத்த ஆண்டு ராட்சசன் 2 படம் நடக்குது என கூறியுள்ளார்.
இதில் பேசிய அவர், “எனது அடுத்த படம் கட்டா குஸ்தி 2, அடுத்த வருடம் ராட்சசன் 2வும் வருது” என கூறினார். இது அப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ராட்சசன் பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் தற்போது இரண்டு வானம் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.