அனிருத்துக்கு நான் போட்டியா? சாய் அபயங்கார் ஓப்பனாக சொன்ன பதில்

இதுவரை இசையமைப்பாளர் அனிருத் தான் தமிழ் சினிமாவில் இளம் சென்சேஷன் இசையமைப்பாளராக வலம் வந்த நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக சாய் அபயங்கார் வந்திருக்கிறார்.
தொடர்ந்து சாய் அபயங்காருக்கு பெரிய ஹீரோ படங்களாக தற்போது வந்து குவிகிறது. அதனால் அனிருத்துக்கு இனி அவர்தான் போட்டி என பலரும் கூறி வருகிறார்கள்.
அவரே சொன்ன பதில்
இந்நிலையில் அனிருத் உடன் போட்டியா என சாய் அபயங்காரிடம் செய்தியாளர்கள் நேரடியாகவே கேட்ட நிலையில் “அய்யய்யோ இல்லீங்க.. அவர் நிறைய பண்ணிட்டாரு, நான் இப்போ தான் ஆரம்மிச்சிருக்கேன்.”
“நல்லா work பண்ணனுமே தவிர, போட்டி எல்லாம் இல்லை. இன்னும் நிறைய இருக்கிறது” என சாய் அபயங்கார் கூறி இருக்கிறார்.