அனிருத்துக்கு எப்போ கல்யாணம்..? அவருடைய தந்தை கூறிய தகவல்

அனிருத்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் அனிருத் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார்.
சமீபத்தில் கூலி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட, ஆசியாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் அனிருத் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இது படுவைரலானது.
அனிருத்துக்கு எப்போ கல்யாணம்
நேற்று கூலி திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், இப்படத்தை திரையரங்கில் காண, அனிருத்தின் தந்தை வந்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு செல்லும்போது அவரிடம் அனிருத்தின் திருமணம் எப்போது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அந்த ரிப்போர்ட்டர், அனிருத் சாருக்கு எப்போ கல்யாணம் என கேள்வி கேட்க, அதற்கு அனிருத்தின் தந்தை, “நான் உங்கள கேட்கலாம்னு நினைக்கிறன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. என்ன கூப்புடுங்க” என கூறியுள்ளார்.