அந்த இயக்குநருடன் மோதல் இருந்தது உண்மை, ஆனால்.. ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர், இந்த ஆண்டு தலைவன் தலைவி படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி ஓபன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” நாம் என்ன செய்தாலும் அது குறித்து விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்க தான் செய்யும். அதை எல்லாம் கவனித்து கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது.
இயக்குநர் பாண்டிராஜ் உடன் சண்டையாமே? என்று கேட்கிறீர்கள். எங்களுக்குள் சில முட்டல் மோதல்கள் வந்தது உண்மைதான். இப்போது அதெல்லாம் சரி ஆகிவிட்டது.
இது சினிமாவில் சகஜம்தான், பெரிய விஷயம் கிடையாது. வெற்றியை தேடாமல், வேலையை ரசித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெற்றி நமது சிந்தனையில் இருந்தால் பாரம் வந்து விடும். தவறு என்றால் அதை திருத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.