அது என் தவறு தான்.. நடிகர் அமீர் கான் ஓபன் டாக்

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் தோல்விகள் அதிகம் கொடுக்காத நடிகராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவர் கடந்த சில வருடங்களாக தோல்விகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் கூலி படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார். ஆனால் அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
அவரது Laal Singh Chaddha தோல்வி அடைந்தது பற்றி பேசிய அமீர் கான் தான் ஓவர் confidence காரணமாக செய்த தவறுகள் தான் அதற்கு காரணம் என கூறி இருக்கிறார்.
என் தவறு தான்
இந்த படம் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்காது என்பது எனக்கு தெரியும். அதனால் 80 கோடிக்கு செலவுகளை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை விட மூன்று மடங்கு செலவு செய்துவிட்டேன்.
நான் ஓவர் confidence ஆக இருந்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறி இருக்கிறார்.
விட்டுவிட்டேன்
மேலும் Sitaare Zameen Par படம் ஓடிடியில் வெளியிட 120 கோடி கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் அதை விட்டுவிட்டு நேரடியாக youtubeல் ரிலீஸ் செய்தேன். அதனால் நல்ல தொகை கிடைத்தது, ஆனால் 120 கோடி அளவுக்கு எல்லாம் அது இல்லை என அமீர் கான் கூறி இருக்கிறார்.