அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா..

விருது விழா
விஜய் தொலைக்காட்சியில் வருடாவருடம் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் விருது விழா நடைபெறும். அந்த வகையில் தற்போது 10வது வருட விஜய் தொலைக்காட்சி விருது விழா நடைபெற்றுள்ளது.
இதில், விருது வாங்கிய சீரியல்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
வென்றவர்களின் பட்டியல்
FindOfTheYear எனும் விருதை அய்யனார் துணை சீரியல் கதாநாயகன் அரவிந்த் மற்றும் கதாநாயகி மதுமிதா வாங்கியுள்ளனர். சிறந்த ஜோடி என்கிற விருதை மகாநதி சீரியலுக்காக விக்ரம் – காவேரிக்கு கிடைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் – ராஜி ஜோடிக்கு Budding Pair என்கிற விருதை வாங்கியுள்ளனர். சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதை ஆர்.எஸ். சரவணன் அய்யனார் துணை சீரியலுக்காக வென்றுள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் சேரனாக நடித்து வரும் நடிகர் முன்னாவிற்கு சிறந்த ஆண் கதாபாத்திரம் விருது கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் Special Achievement விருதை பெற்றுள்ளனர்.
சிறந்த எழுத்தாளர் பிரியா (அய்யனார் துணை மற்றும் பாக்கியலட்சுமி). தங்கமகள் சீரியலில் நகைச்சுவையில் கலக்கிய அம்பானி ஷங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது கிடைத்துள்ளது. Favorite Comedy Show-காண விருதை குக் வித் கோமாளி நிகழ்ச்சி வென்றுள்ளது.
சிறந்த கதாநாயகிக்கான விருதை சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி கோமதி பிரியா வென்றுள்ளார். சிறந்த குடும்பம் என்கிற விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வென்றுள்ளது. இதில் அய்யனார் துணை சீரியல் அதிக விருதுகளை வென்றுள்ளது என தெரிகிறது.






