அட நடிகர் சந்தானம் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே…. அடுத்த ஹீரோவா, போட்டோ இதோ

நடிகர் சந்தானம்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மாபெரும் உச்சத்தை தொட்ட நடிகர் என்றால் அது சந்தானம் தான்.
காமெடியனாக சந்தானம் நடித்த காலத்தில் அவர் இல்லாத படமே இல்லை என்றளவிற்கு எல்லா படங்களிலும் நடித்து வந்தார். பெரிய ஹீரோ படமோ, சின்ன படமோ எல்லா படத்திலும் தனது 100% உழைப்பை போட்டு நடித்து வந்தார்.
காமெடி நடிகராக கலக்கி வந்தவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாக அடுத்தடுத்து படங்கள் நடிக்கும் சந்தானம் தற்போது Santa 20 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட், K 7 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
மகன்
46 வயதாகும் நடிகர் சந்தானம் கடந்த 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானது கிடையாது, அவரது மகன் நிபுன் புகைப்படங்கள் மட்டும் சில வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சந்தானத்தை விட உயரமாக ஹீரோவாக ரேஞ்சிற்கு வளர்ந்திருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோவா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.






