அடேங்கப்பா நடிகை நதியாவா இது, 58 வயதிலும் Heavy Workout… வீடியோ பாருங்க

நடிகை நதியா
நடிப்புக்கு தீனி போடும் வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தவர் தான் நதியா.
மலையாளத்தில் 1984ம் ஆண்டு நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.
மலையாளத்தில் முதல் படத்தில் மோகன்லாலுடனும், தமிழில் முதல் படத்தில் பத்மினி போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்து அசத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் திடீரென சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
வீடியோ
58 வயதிலும் மிகவும் பிட்டாக இருக்க நதியா தொடர்ந்து உடற்பயற்சி செய்து வருகிறார்.
அண்மையில் நதியா தனது வீட்டில் Heavy Workout செய்யும் வீடியோ வெளியாக 58 வயதிலும் ஆக்டீவாக உள்ளாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.