விடாமுயற்சி திரை விமர்சனம்

விடாமுயற்சி திரை விமர்சனம்


விடாமுயற்சி

அஜித் 2 வருடங்கள் கழித்து மீண்டும் விடா முயற்சி மூலம் திரையில் தோன்ற, அதிலும் மகிழ் திருமேணி என்ற தரமான இயக்குனர் கூட்டணியுடன் வர, அஜித் ரசிகர்கள் தாண்டி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்க, அவர்கள் எல்லோரின் காத்திருப்புக்கும் விடா முயற்சி விருந்து வைத்ததா பார்ப்போம். 

விடாமுயற்சி திரை விமர்சனம் | Vidaamuyarchi Movie Review

கதைக்களம்


அஜித், திரிஷா பார்த்தவுடனே இருவருக்கும் பிடிக்க, 3 வருடம் காதலித்து திருமணம் செய்கின்றனர்.

வாழ்க்கை அழகாக போக, திரிஷா கர்ப்பம் ஒரு முறை கலைகிறது, அதோடு அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்ய இருக்கிறார்கள்.


அந்த நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு திரிஷா போக முடிவெடுக்க, அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க வேண்டும் என ட்ராப் செய்ய வருகிறார்.


வந்த இடத்தில் கார் ப்ரேக் டவுன் ஆக, அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி செய்து, திரிஷாவை மட்டும் ட்ரெக்கில் ஏற்றி செல்கின்றனர்.

ஆனால், ட்ரக்கில் ஏறிய திரிஷா காணாமல் போக, அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார்.


அஜித் போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல அங்கு பெரிய டுவிஸ்ட் ஒன்றை ரெஜினா சொல்ல, அதன் பின் அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா, ரெஜினா சொன்னது உண்மையா என்பதே மீதிக்கதை.  

படத்தை பற்றிய அலசல்



அஜித் இப்படி ஒரு மாஸ் ஹீரோ இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம், அதை விட இந்த கதாபாத்திரம், ஒரு நார்மல் மனிதன் பிரச்சனை வந்தால் அவன் தெம்புக்கு என்ன செய்வானோ அப்படி இதை உருவாக்கியதற்கே மகிழ் திருமேனிக்கு பாராட்டுக்கள்.


அஜித்-திரிஷா இருவரின் ஜோடியும் திரையில் அத்தனை அழகு, அதிலும் இளமை தோற்றத்தில் அஜித் தோன்றும் காட்சி சூப்பர், திரிஷா தன் வீட்டிற்கு போக வேண்டும் என கூறி இருவரின் பயணம் ஆரம்பித்ததும் மெல்ல கதை சூடு பிடிக்கிறது.



அதிலும் ஆரவ் கேங் செய்யும் அட்டகாசம், அதை தொடர்ந்து அர்ஜுன், ரெஜினா வருகை, திரிஷா காணாமல் போவது என ஒரு பதட்டம் படத்தில் இருந்துக்கொண்டே உள்ளது, ஆனால், காட்சிகள் கொஞ்சம் மெதுவாகவே நகர்வது சினிமா ரசிகர்கள் தாண்டி ஆலுமா டோலுமா எதிர்பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் தான்.


மேலும், அர்ஜுன் ரெஜினா பேக் ஸ்டோரி மகிழ் பேட் மேன் படத்தில் வரும் ஜோக்கர், ஹார்லி குயில் போல் உருவாக்கியுள்ளார், அதிலும் ரெஜினா தன் தோழியை கொலை செய்யும் காரணம் எல்லாம் பெரும் சைக்கோதனத்தை காட்டியுள்ளார்.


படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத் இசை, மெதுவாக நகரும் காட்சிகளை கூட தன் பின்னணி இசையால் தாங்கி புடித்துள்ளார், அதிலும் அஜித்தே என்று கத்துவது போல் அவர் போட்ட இசை, தியேட்டர் அதிர்கிறது, கிளைமேக்ஸ் பத்திகிச்சு சாங் ரசிகர்களுக்கு விருந்து.


அதே நேரத்தில் அஜர்பைஜான் லாண்ட்ஸ்கேப்-யை அத்தனை அழகாக காட்டியுள்ள ஓம் பிரகாஷையும் பாராட்டாமல் இருக்க முடியாது, மேலும் ஆரவ்-வுடன் காரில் நடக்கும் சண்டைக்காட்சி சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் க்ளாஸ்.


என்ன தான் படம் என்கேஜிங் ஆக போனாலும், பல இடங்களில் பொறுமையை சோதிக்கும் மெதுவாக நகரும் காட்சிகள் இருப்பதையும் சொல்லியே ஆகவேண்டும், இரண்டாம் பாதி இன்னமும் மகிழ் கவனம் செலுத்தியிருக்கலாம் திரைக்கதையில்.


க்ளாப்ஸ்


அஜித் முழு படத்தையும் தன் நடிப்பால் தாங்கி செல்கிறார்.

அனிருத் இசை, படத்தின் ஒளிப்பதிவு.

முதல் பாதி.


பல்ப்ஸ்


இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.


மொத்தத்தில் விடா முயற்சி விறுவிறுப்பு கூட்டியிருந்தால் விஸ்வரூப வெற்றி அடைந்திருக்கும்.

3/5


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *