ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விடாமுயற்சி படம்.. இதுவரை இத்தனை கோடி வசூலா

விடாமுயற்சி
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் விடாமுயற்சி படம் வருகிற 6ம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது.
அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங் வசூல்
இப்படம் வெளிவர இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ப்ரீ புக்கிங் வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வரை வசூல் ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது. இதுவே விடாமுயற்சி படத்தின் தற்போதை ப்ரீ புக்கிங் வசூல் விவரமாகும்.






