ஓ.டி.டி.யில் வெளியாகும் 'பயாஸ்கோப்' திரைப்படம்

சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவரது இயக்கத்தில் கடந்த 3-ந் தேதி வெளியான படம் ‘பயாஸ்கோப்’. இப்படத்தை 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். கிராமத்து மக்களின் பங்களிப்பில் உருவாகி 2011-ல் வெளியான ‘வெங்காயம்’ படம் சிறந்த கதையம்சத்துக்காக திரையுலகினரை கவர்ந்தது. வெங்காயம் படம் எப்படி உருவானது என்ற உண்மை சம்பவ பின்னணியே ‘பயாஸ்கோப்’ படத்தின் கதை.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 31-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.�