அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: இந்திராணியின் மாஸ்டர் பிளான் என்ன?
ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தொடர், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்திய எபிசோடில் மர்ம மரணம், வர்மாவின் ஆவேசம், அயலிக்கு இந்திராணி கொடுக்கப்போகும் பெரிய பதவி என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
மர்ம மரணம்… ஆத்திரத்தில் கொதிக்கும் வர்மா!
இந்திராணியின் ஆட்கள் அலுவலகத்துக்குச் சென்று தேடும்போது, அங்கிருந்த செய்தித்தாளில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. லாட்ஜில் உடல் கருகிய நிலையில் பாம்பேக்காரன் மற்றும் குணசேகரன் இருவரும் இறந்து கிடந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், தன்னைத் தொட்டுவிட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் வர்மா, “என்னையே தொட்டுட்டான்ல… அவனை நான் சும்மா விடமாட்டேன்” என்று ஆவேசமாகச் சபதம் எடுக்கிறான். இதனால் வர்மாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அயலிக்கு பெரிய பதவி கொடுக்க முடிவு செய்த இந்திராணி!
மறுபக்கம், இந்திராணி யாருடனோ போனில் முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, அயலிக்கும் சிவாவுக்கும் தனது அலுவலகத்தில் வேலை கொடுப்பதாகச் சொன்னதை நினைத்துப் பார்க்கிறார். இப்போது அயலிக்கு ஒரு பெரிய பதவியையே கொடுக்கலாம் என்று திடீரென முடிவு செய்கிறார்.
இதைக் கேட்ட காளியப்பன் அதிர்ச்சியடைந்து, “பெரிய போஸ்டிங்கா? எதுக்கு? அவங்களுக்கு இதுல என்ன அறிவு இருக்கு?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு இந்திராணி, “அதெல்லாம் அவங்க கத்துப்பாங்க” என்று உறுதியாகச் சொல்கிறார். கபிலனிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, “அக்கா, நீங்க என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும்” என்று இந்திராணிக்கு ஆதரவாகப் பேசுகிறான்.
அயலிக்கு திடீரென இவ்வளவு பெரிய பதவி கொடுக்க இந்திராணி முடிவு செய்திருப்பது, ஏதோ ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மாமாவை நினைத்து ஏங்கும் அயலி!
வீட்டில் சிவாவை நினைத்து அயலி ஏக்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாள். “மாமாவுக்கு பொரியல், உருண்டைன்னா ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு மட்டும்தான் எப்பவும் ஆசையா செஞ்சு கொடுத்திருக்காரு.
ஆனா, அவருக்காக நான் எதுவுமே செஞ்சதில்ல. இப்போ மாமாவை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று தனது மனதில் இருக்கும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறாள்.
இதைக் கேட்ட பாட்டி, “அதெல்லாம் சரி, எப்போ குட்டி போடப் போற? கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சுல்ல?” என்று கிண்டல் செய்கிறார். இதனால் அயலி, யாரோ கூப்பிட்டது போல கூப்பிட்டியா? இதோ வரேன்” என்று சொல்லி பேச்சை மாற்றிவிட்டு அங்கிருந்து நழுவுகிறாள்.
இப்படி ஒருபக்கம் அயலி சிவாவை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் இந்திராணி அவளுக்கு பெரிய பதவி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இந்திராணியின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன? அயலி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வாளா? வர்மா அடுத்து என்ன சதி செய்யப் போகிறான்? என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
