ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்


O.M: Operation Mole movie first day Box office: தனுஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


ஓம்


இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ‘அமரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் தனுஷுடன் ‘ஓம்’ திரைப்படத்திற்காக கைகோர்த்தார். இப்படத்தில் சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா என முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole Movie First Day Box Office



உண்மை சம்பவம்


2015-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில், ஆந்திர பிரதேச செம்மர கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடி படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole Movie First Day Box Office


விமர்சனம்


பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான ஓம் திரைப்படம் முதல் நாள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. தங்கள் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே பலருடைய விமர்சனமாக உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole Movie First Day Box Office



முதல் நாள் வசூல்



இந்த நிலையில், ஓம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் முதல் நாளில் இப்படம் ரூ. 30+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole Movie First Day Box Office


பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *