சத்தியவான் சாவித்திரி திரை விமர்சனம்
கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்கள் பிறகு சோலோ ஹீரோயினாக ப்ரவீன் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த சத்தியவான் சாவித்திரி எப்படி? பார்ப்போம்.
கதைக்களம்
கீர்த்தி சுரேஷ் லா படித்துவிட்டு மார்கெண்டயன்(மிஷ்கின்) என்ற பெரிய லாயரிடம் உதவியாளராக பணிபுரிய நினைக்கிறார். அதற்கான லெட்டரும் வர, கீர்த்திக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர்.
பிடிக்காமல் அந்த திருமணம் நடந்தாலும், கீர்த்தி கணவர் வேலைக்கு போக முழு ஆதரவும் கொடுக்க, அவரும் மிஷ்கினிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பெரிய கேஸ் ஒன்று வருகிறது.
அந்த கேஸில் கிட்டதட்ட மிஷ்கின் ஜெயிக்கும் நாள் வர, ஏதோ தப்பா இருக்கே என கீர்த்தி, மிஷ்கினுக்கு எதிராக வாதாடி அந்த கேஸையே மாற்றி ஒரே நாளில் தீர்ப்பு வர வைக்கிறார்.
இதை தொடர்ந்து ஊரே அவரை தலையில் தூக்கி கொண்டாட, அந்த நேரத்தில் கீர்த்தியின் கணவர் காரில் ஒரு பெண் சடலமாக கிடைக்க, அந்த கேஸ் நீதிமன்றம் வர, இதன் பின் கீர்த்தி இந்த கேஸை கையில் எடுக்க, மிஷ்கின் மீண்டும் எதிராக வர, அந்த பெண்ணை கொன்றது யார்? இதற்கு பின்னால் என்ன இருக்கிறது? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கீர்த்தி நீண்ட நாட்கள் கழித்து தன் துறுதுறு நடிப்பில் கவனம் ஈர்க்கிறார், அதிலும் முதல் நாள் மிஷ்கினுக்கு எதிராக அவர் வாதாடும் போது, ஜட்ஜிடம் தடுமாறி தடுமாறி பேசி, பிறகு அப்டியே லீட் எடுத்து பேசும் இடம், இரண்டாம் பாதியில் தன் கணவருக்கு நீதி வாங்கிதர அவர் போராடும் விதம் என கீர்த்தி கெரியரில் மிக முக்கிய கதாபாத்திரம் தான் இந்த சத்தியவான் சாவித்திரி.
மிஷ்கின் எத்தனை ரோல் கொடுத்தாலும், அத்தனையும் என் இஷ்டத்திற்கே செய்வேன் என்பது போல் தான் செய்துள்ளார், சேம் மேனரிசம் தான், ஒரு கட்டத்திற்கு மேல் என்ன எதாவது ஆடியோ லான்ச்-ல் இருந்து நேராக ஷுட்டிங் வந்துவிட்டாரோ என்பது போல் இருக்கிறது.
படத்தின் முதல் பாதி பிடிக்காத திருமணம், பிறகு புரிதல், காதல், பெரிய கேஸ் அதை ஒரே நாளில் முடிப்பது என ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் போர் அடிக்காமல் செல்கிறது. மிஷ்கினை முதல் கேஸில் தோற்கடிக்கும் இடம் கிட்டத்தட்ட ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோ படம் பார்ப்பது போல் ஆகிறது.
படத்தின் இரண்டாம் பாதி கணவரை காப்பாற்றுவாரா இந்த சாவித்திரி என்ற போராட்டத்துடன் தொடங்க, 80% படம் நீதிமன்றத்திலேயே செல்கிறது, ஆனால், அந்த போராட்டம் முழுவதும் யதார்த்தம் தாண்டி நாம் இதுவரை பார்த்த பல கோர்ட் ட்ராமா காட்சிகளே நிறைந்து உள்ளது, ஒரு கட்டத்திற்கு மேல் இதுதானே என்று நம் நினைக்கும் இடத்தில் வரும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்… அட என்னட இது என நினைக்க வைப்பது படத்தை முடிக்கையில் டீசண்ட் பீல் வந்துவிடுகிறது.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அந்த கோட்ர் 4 சுவர், கீர்த்தி வீடு இது இரண்டு தான் படம் முழுவதும் வருகிறது என்றாலும் அதை அழகாக காட்டியுள்ளனர், எங்கும் சலிப்பி தட்டாமல், சாம் சி எஸ் இசை இன்னும் பெட்டர் ஆக இருந்திருக்கலாம் பீல்.
க்ளாப்ஸ்
கீர்த்தி ஒன் வுமன் ஷோ கலக்கிவிட்டார்.
படத்தின் இரண்டாம் பாதி
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
முதல் பாதி போர் அடிக்கவில்லை என்றாலும் இன்னும் இண்டன்ஸ் ஆக சில விஷயங்கள் இருந்திருக்கலாம்.
பார்த்து பழகி போன சில காட்சிகள், முக்கியமாக மிஷ்கினின் டெம்ப்ளேட் நடிப்பு
மொத்தத்தில் இந்த சத்தியவான் சாவித்திரி கிட்டதட்ட கேஸில் தோற்கும் நிலை வந்து, கிளைமேக்ஸ் பிரமாஸ்த்திரம் டுவிஸ்ட் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டார்.
