அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் Rolls Royce கார் வரும்… மகாநதி சீரியல் நடிகை பரபரப்பு புகார்…
பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இப்போதெல்லாம் அதிகமாக நடக்கிறது.
அதிலும் மீடியாவில் அதிகம் இருப்பதாக ஏகப்பட்ட பிரபலங்கள் முன்வந்து கூறுகின்றனர். ஒருகாலகட்டத்தில் MeToo என பல பிரபலங்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் எல்லாம் வந்தது. இப்போதும் இந்த பாலியல் தொல்லை பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கிறது.
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் இளம் கலைஞர்கள் நடிகக மகாநதி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை கதையாக சீரியல் ஒளிபரப்பாகி வரும் இடையில் அப்படியே சுத்தமாக கதை மாறி விஜய்-காவேரி கதையாக நகர்ந்தது.
இந்த சீரியல் முடியும் போது ரசிகர்கள் அனைவருமே சீரியலை முடிக்க வேண்டாம் என கதறினார்கள்.
மகாநதி சீரியல் ஆரம்பிக்கும் போது கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பிரதீபா. பாதியிலேயே சில காரணங்களால் வெளியேறியவர் பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார்.
பாலியல் தொல்லை
அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் உங்கள் வீட்டின் முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும் என்று கூறினார்.
என்னை நம்ப வைப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து ஆதாரங்களையும் காட்டினார். ஆனால் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் தேவையில்லை, ஆட்டோவில் பயணம் செய்வதிலேயே நான் வசதியாக உணர்கிறேன்.
நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் இன்னும் 40 அல்லது 50 ஆண்டுகள் வாழக்கூடும்.
என் எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனக்கென்று ஒரு கனவு வீட்டை மனதில் வைத்திருக்கிறேன்.
அது ஒருவேளை நனவாகாமல் போனாலும் எனக்குக் கவலையில்லை.
