2027 பொங்கல் ரேஸில் இத்தனை தமிழ் படங்களா.. லிஸ்ட் இதோ
மக்கள் கொண்டாடும் பண்டிகை நாட்களை குறிவைத்து அதிக அளவில் படங்கள் வெளியாவது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் ரிலீஸில் போட்டி அதிகம் இருக்கும்.
இந்த வருடம் தீபாவளிக்கு ராமாயணா, மூக்குத்தி அம்மன் 2, சூர்யாவின் சீன் உள்ளிட்ட பல படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன.
பொங்கல் 2027
இந்நிலையில் அடுத்து 2027 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் போட்டியில் ஏராளமான படங்கள் இருக்கின்றனவாம்.
அஜித்தின் Gladiators, விஷாலின் புருஷன், விஜய் சேதுபதியின் பாக்கட் நாவல், பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம், அருள்நிதியின் டிமான்டி காலனி 3, VJ சித்துவின் டயங்கரம் ஆகிய படங்கள் 2027 பொங்கலுக்கு வெளிவர இருக்கிறதாம்.
இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் இந்த லிஸ்டில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
