இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்ட நடிகை த்ரிஷா


Trisha Latest Photoshoot: தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் அவ்வப்போது அதில் பதிவிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.



நடிகை த்ரிஷா



கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் த்ரிஷா. 96, பொன்னியின் செல்வன், லியோ, குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தன. இதனால், 20 ஆண்டுகள் கடந்தும் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்ட நடிகை த்ரிஷா | Actress Trisha Krishnan Saree Photoshoot



அடுத்த படம்


நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் விஸ்வம்பரா திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், அடுத்ததாக தலைப்பிடப்படாத சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படத்தில் ராதிகா சரத்குமாருடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்ட நடிகை த்ரிஷா | Actress Trisha Krishnan Saree Photoshoot



இன்ஸ்டாகிராம் பதிவு


இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிற்கு 10 மில்லியன் followers உள்ளனர். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே உடனடியாக வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில், ஜொலிக்கும் ஆடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



இதோ அந்த புகைப்படங்கள்:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *