பிக்பாஸ் 10வது சீசனில் அய்யனார் துணை சீரியல் நாயகி…
அய்யனார் துணை
அய்யனார் துணை, வழக்கமான சீரியல் கதைக்களமாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர்.
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.
இப்போது கதையில் சந்தா-சேரன் ஹனிமூன் தனியாக சென்றுள்ளனர், ஆனால் அவர்களுக்கு இந்த ஹனிமூன் முடிவதற்குள் ஏதோ பிரச்சனை நடக்க இருப்பதாக தெரிகிறது.
இன்னொரு பக்கம், நிலாவிற்கு வளையல் வாங்கி கொடுக்க சோழன் ஒரு வேலை செய்கிறார், அதற்காக பணமும் கிடைக்கிறது. அடுத்து படம் பார்க்க சென்ற இடத்தில் பாண்டி வானதியை பார்த்து ஷாக் ஆவாரா, பிரச்சனை நடக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
பிக்பாஸ் 10
விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களும் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி அதிகப்படியான மக்களின் விருப்பமான ஷோவாக உள்ளது பிக்பாஸ் 10. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க உங்களுக்கு அழைப்பு வந்ததா என அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அய்யய்யோ விட்டுடுங்க, எனக்கு அந்த ஷோ செட் ஆகாது, சண்டை போட பிடிக்காது. ஏதாவது பிரச்சனை என்றால் நான் தான் தப்பு செய்தேனா, மன்னிச்சிடுங்க என்று கேட்பேன் என்கிறார். பிக்பாஸ் எனது Cup Of Tea கிடையாது என கூறுகிறார்.
