மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. நெகிழ்ச்சியான பதிவு


Manjanathi first schedule Completed: மஞ்சணத்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



மாரி செல்வராஜ்



பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. நெகிழ்ச்சியான பதிவு | Manjanathi Movie First Schedule Completed



மஞ்சணத்தி


மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்தில் கயாடு லோஹர், பிரியங்கா மோகன், கதிர், விது, பூர்ணிமா ஆகியோர் நடிக்கின்றனர்.

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. நெகிழ்ச்சியான பதிவு | Manjanathi Movie First Schedule Completed



முதற்கட்ட படப்பிடிப்பு


இந்நிலையில், மஞ்சணத்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது X தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. நெகிழ்ச்சியான பதிவு | Manjanathi Movie First Schedule Completed

இந்த பதிவில், “மஞ்சணத்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த அற்புதமான நாட்களையும், மறக்க முடியாத அனுபவங்களையும் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *