சூர்யாவின் சீன் படத்தின் முதல் விமர்சனம்
சீன்
சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் சீன். ஆவேசம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதோடு ரீசண்ட் ஆக ரிலிஸ் ஆன நஸ்லான் டீசர் ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது, நஸ்லான் இந்த படத்தில் சீரியல் கில்லராக நடிக்க, சூர்யா அவரை பிடிக்கும் போலீஸாக வருகிறார். இவர்கள் இருவருக்குமான ஆடுபுலி ஆட்டமே இந்த சீன் என கூறப்படுகிறது.
முதல் விமர்சனம்
இந்நிலையில் வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் இந்த படம் குறித்து முதல் விமர்சனம் ஒன்றை தெரிவித்துள்ளார், அதில், இந்த வருடம் சூர்யா சார்-க்கு ஹாட்ரிக் வெற்றி தான், தீபாவளி நம்முடையது தான் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் இந்த வருடம் அப்போ சூர்யா வருடம்தான் என உற்சாகத்தில் உள்ளனர், ஏற்கனவே சூர்யா நடிப்பில் இந்த வருடம் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
