கயல் சீரியல் கிளைமேக்ஸ் ப்ரோமோ: உண்மையை போட்டுடைத்த தர்மலிங்கம்
சன் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது கயல் சீரியல். தற்போது அது முடிவுக்கு வர இருப்பதாக சேனல் அறிவித்து இருப்பது அந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
இருப்பினும் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் சஞ்சீவ் விலகிய பிறகு சீரியல் அதிகம் விமர்சனங்களை சந்தித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளைமாக்ஸ் ப்ரோமோ
தற்போது கிளைமாக்ஸ் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கயல் உப்புபோட்டு சாப்பிடுவதில்லை என்பதை அறிந்து தர்மலிங்கம் அதற்கான காரணத்தை கேட்கிறார்.
என் அப்பா மீது இருக்கும் களங்கத்தை துடைக்காத வரை நான் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை என்கிற வயிராக்கியத்துடன் இருக்கிறேன் என கயல் கூறுகிறார்.
அதன் பின் தர்மலிங்கம் பெரிய உண்மையை போட்டுடைக்கிறார். பணத்தை திருடியதாக நான் தான் உங்கள் அப்பா மீது பொய்யாக பழியை சுமத்தினேன் என தர்மலிங்கம் கூறுகிறார்.
அதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகிறது. ப்ரோமோ இதோ.
