முத்துவை அழிக்க திட்டம்.. சூழ்ச்சியில் இருந்து மீள்வாரா? சிறகடிக்க ஆசை சீரியல்
Siragadikka aasai serial: சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் டிராவல்ஸ் தொழிலில் இருந்து அவரை மொத்தமாக அழிக்க திட்டம் போடப்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது, முத்து தொடங்கிய டிராவல்ஸ் தொழிலானது நல்லபடியாக போய்க்கொண்டிருக்க, அவர் மேமேலும் வளர்ந்தால் தனக்கு ஆபத்து என ரகு நினைக்கிறார்.
இதனால் முத்துவை இந்த தொழிலில் இருந்து அடியோடு வெளியே அனுப்ப வேண்டும் என தொடர்ந்து பல சதி திட்டங்களை செய்து வருகிறார்.
அடுத்த வாரம்
இந்த நிலையில், தற்போது முத்துவிடம் பணிபுரியும் ஓட்டுநர்களை வைத்து சூழ்ச்சி செய்துள்ளார். முத்துவின் கார் விபத்துக்குள்ளாகி விட்டது என அவருக்கு போன் கால் வர, அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
இந்த சூழ்ச்சியில் இருந்து முத்து எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ப்ரோமோ வீடியோ:
