தேனிசை தென்றல் தேவா காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்
Thenisai thendral deva passes away: தமிழ் சினிமாவில் தேனிசை தென்றல் என அழைக்கப்பட்டு வந்த இசையமைப்பாளர் தேவா இன்று காலமானார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தேவா
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா போன்ற ரஜினியின் சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுமட்டுமின்றி கானா உலகின் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலமானார்
இன்று காலை உடல்நல குறைவு காரணமாக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 75.
தேவாவின் காலமானார் என்கிற செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.
