கோவிலில் எழுந்த சந்தேகம்…. அரங்கேறும் அதிரடி திருப்பங்கள்
கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘கார்த்திகை தீபம்’.
இந்தத் தொடரில் இப்போது அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
சுவாதிக்காகக் கோவிலில் பூஜை செய்யும் ரேவதி!
ரேவதி, சுவாதியின் தாலியை எடுத்துக்கொண்டு கோவிலுக்குப் பூஜை செய்ய வருகிறார்.
அதே நேரத்தில் கார்த்திக்கும் அங்கு வருகிறார். இருவரும் சேர்ந்து சுவாதிக்காகப் பூஜை செய்கிறார்கள். அப்போது ரேவதி, சுவாதிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறார்.
அந்த நேரத்தில் அங்கிருக்கும் ஜோசியர் ஒருவர் ரேவதியிடம், “உங்க கணவரால ஏதோ பெரிய பிரச்சனை வரும்னு உங்க அம்மா சொன்னாங்களே?” என்று கேட்கிறார். அதற்கு ரேவதி, கார்த்திக்கைக் காட்டி, “இவர்தான் என்னோட கணவர். யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லியிருக்காங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
மகேஷைத் துரத்திச் செல்லும் கார்த்திக்!
கோவிலிலிருந்து வெளியே வரும் கார்த்திக், திடீரெனச் சாலையில் மகேஷைப் பார்க்கிறார். உடனே அவனைத் துரத்திச் செல்கிறார். ஆனால் மகேஷ், சதீஷின் வீட்டுக்குள் சென்று மறைந்துகொள்கிறான்.
கார்த்திக் அந்த வீட்டுக்குள் சென்று தேடிப் பார்க்கும்போது, அங்கே சதீஷும் பத்மாவும் மட்டுமே இருக்கிறார்கள். மகேஷ் அதற்குள் தப்பித்துவிடுகிறான்.
இதனால் சந்தேகமடையும் கார்த்திக், நடந்த விஷயத்தை உடனடியாக மயில்வாகனத்திடம் தெரிவிக்கிறார்.
திருமணப் பத்திரிகையால் மகிழ்ச்சியில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
மறுபக்கம், சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு திருமணப் பத்திரிகைகள் வந்து சேருகின்றன.
வீட்டில் இருப்பவர்கள் அந்தப் பத்திரிகைகளை உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் கொடுப்பதற்காகப் பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள்.
அப்போது கார்த்திக் மற்றும் ரேவதியிடம் முதல் பத்திரிகையைக் கொடுக்கிறார்கள்.
அதை முதலில் பாட்டியிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்கிறார்கள். இதனால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மாறுவேடத்தில் வரும் மயில்வாகனம்…
சதீஷின் உண்மை முகம் அம்பலம் ஆகுமா?
மகேஷ் மற்றும் சதீஷ் விஷயத்தில் சந்தேகம் அதிகமாகவே, மயில்வாகனம் நேரடியாக விசாரணையில் இறங்குகிறார்.
ஏற்கெனவே சுவாதி ஒரு முக்கியமான அடையாளத்தைச் சொல்லியிருக்கிறார். சதீஷ் தனக்காகச் சண்டை போட்டபோது, அவனுடைய முதுகில் தையல் போட்ட பெரிய தழும்பு ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
அந்த அடையாளத்தை வைத்து, இப்போது இருப்பது உண்மையான சதீஷ்தானா என்று கண்டுபிடிக்க மயில்வாகனம் திட்டமிடுகிறார்.
அதன்படி, ஆதார் கார்டு சரிபார்க்கும் அதிகாரி போல மாறுவேடமிட்டு அந்த வீட்டுக்குள் செல்கிறார். அங்கிருப்பவர்களிடம் பேச்சுக் கொடுத்தபடியே, சதீஷின் முதுகையும் பார்த்துவிடுகிறார். ஆனால் அங்கே சுவாதி சொன்ன தழும்பு அடையாளமே இல்லை!
இதனால் வீட்டில் இருப்பது உண்மையான சதீஷ் இல்லை என்பதை மயில்வாகனம் உறுதி செய்கிறார்.
உடனே இந்த அதிர்ச்சியான தகவலைக் கார்த்திக்கிடமும் தெரிவிக்கிறார். அப்படியென்றால், சதீஷ் என்ற பெயரில் இருப்பது யார்? உண்மையான சதீஷுக்கு என்ன ஆனது?
ஜோசியர் சொல்லும் அதிர்ச்சியான உண்மை!
இதையடுத்து கார்த்திக்கும் மயில்வாகனமும் கோவிலில் ரேவதியிடம் பேசிய ஜோசியரை நேரில் சந்திக்கிறார்கள். அப்போது கார்த்திக், “கோவில்ல ரேவதிகிட்ட எதுக்காக அப்படிச் சொன்னீங்க?” என்று கேட்கிறார்.
அதற்கு ஜோசியர், “உண்மையிலேயே இந்தத் திருமணம் சுவாதிக்கு நடக்கப்போறது இல்லை. ரேவதிக்குத்தான் நடக்கப்போகுது. சாமுண்டீஸ்வரி அன்னைக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தப்பவே எனக்கு இது தெரிஞ்சிடுச்சு. அதனாலதான் அப்படிச் சொன்னேன்” என்று கூறுகிறார்.
ஜோசியர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு கார்த்திக்கும் மயில்வாகனமும் அதிர்ச்சியடைகிறார்கள்.
திருமணம் தொடர்பாக அவர் சொன்னது உண்மையா? சுவாதியின் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது? சதீஷ் பற்றிய மர்மத்தின் பின்னணியில் இருப்பது யார்?
இப்படிப் பல கேள்விகளுடன் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக முடிவடைகிறது.
‘கார்த்திகை தீபம்’ தொடரை திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு Zee தமிழில் கண்டு மகிழுங்கள்!
