ஜெயிலர் 2 முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

Jailer 2 Movie Pre booking Collection: ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.



ஜெயிலர் 2



இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் இப்படத்தை எடுத்துள்ளனர்.

ஜெயிலர் 2 முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Jailer 2 Movie Pre Booking Collection

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் 2 முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Jailer 2 Movie Pre Booking Collection

கடந்த வாரம் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.


முன்பதிவு வசூல்


ஜெயிலர் 2 ரிலீஸாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் முன்பதிவு களைகட்டி வருகிறது. அதன்படி, இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஜெயிலர் 2 முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Jailer 2 Movie Pre Booking Collection

இதை வைத்து பார்க்கும்போது, கண்டிப்பாக முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை ஜெயிலர் 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *