பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்


Jailer 2 Pre-booking: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.

ஜெயிலர் 2

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 எப்போது என்கிற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகமாக ஜெயிலர் 2 இருந்த நிலையில், கடந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியானது. இதன்பின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் முடிந்து, தற்போது அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அனிருத்தின் இசை மேஜிக் கண்டிப்பாக ஜெயிலர் 2 படத்திலும் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

மிரட்டலான காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்களை காட்டிய விதம், ரஜினியின் மாஸ் என டிரைலர் வேற லெவலில் இருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவு வசூல்

முன்பதிவு வசூல்

டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே கண்டிப்பாக முன்பதிவு வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில், ரிலீஸிற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரிலீஸிற்கு முன் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *