சிங்கப்பெண்ணே, மருமகள், மூன்று முடிச்சு சீரியல் மெகா சங்கமம்… வெளிவரப்போகும் மிகப்பெரிய உண்மை, புரொமோ


சன் டிவி

சீரியல்கள் காலை முதல் இரவு வரை ஒளிபரப்புகிறோம் ஏதாவது வித்தியாசம் காட்டுவோம் என சன் டிவி என்னென்னமோ செய்கிறார்கள்.

அப்படி அவர்கள் சீரியல்களை வைத்து செய்யும் ஒரு விஷயம் தான் மகா சங்கமங்கள். இப்போது டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, மருமகள் என 3 சீரியல்களின் மெகா சங்கமம் விரைவில் வரப்போகிறது.

சிங்கப்பெண்ணே, மருமகள், மூன்று முடிச்சு சீரியல் மெகா சங்கமம்... வெளிவரப்போகும் மிகப்பெரிய உண்மை, புரொமோ | Singapenne Marumagal Moondru Mudichu Serial Promo

அதற்கான தகவல்கள் இதுவரை வெளிவந்த நிலையில் தற்போது புதிய புரொமோ ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

3 சீரியல் குடும்பங்களும் ஒரு சமையல் போட்டியில் கலந்துகொள்கிறார், அதேபோல் இந்த மகா சங்கமத்தில் மகேஷ்-மித்ரா திருமணமும் நடக்க உள்ளதாம். இதில் நீண்ட நாள் சிங்கப்பெண்ணே ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த ஒரு உண்மை வெளிவரப்போகிறதாம்.

சிங்கப்பெண்ணே, மருமகள், மூன்று முடிச்சு சீரியல் மெகா சங்கமம்... வெளிவரப்போகும் மிகப்பெரிய உண்மை, புரொமோ | Singapenne Marumagal Moondru Mudichu Serial Promo

அதாவது ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற உண்மை வெளிவர இருக்கிறதாம்.

அது எப்படி தெரியப்போகிறது, அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லாம் இந்த மகா சங்கமத்தில் விறுவிறுப்பின் உச்சமாக செல்ல இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *