பணம் கிடைக்காமல் அவதிப்படும் அஜித், டேர்டெவில் நிலைமை
டேர்டெவில்
அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் குட் பேட் அக்லி. இவர் அடுத்து உடனே படம் நடிக்காமல் கார் ரேஸுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இதனால் இவருடைய ரசிகர்களே மிகவும் சோகத்தில் இருக்க, தற்போது அஜித் சொந்த தயாரிப்பில் தான் தன் அடுத்த படத்தை எடுக்கவுள்ளார், இந்த படத்தையும் ஆதிக் இயக்க, இதற்கு டேர்டெவில் என டைட்டில் வைத்துள்ளனர்.
அவதிப்படும் அஜித்
ஆனால், இந்த படத்திற்கு பைனான்சியரிடம் ரூ 100 கோடி கேட்க, அவர்களோ 5 மாதம் வட்டியை பிடித்துக்கொண்டு தான் கொடுப்போம் என சொல்ல, அஜித் மிகவும் ஷாக் ஆகியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், முதல் தயாரிப்பு தானே, இப்போது தெரியும் தயாரிப்பாளர்கள் அருமை என அந்த பத்திரிகையாளர் குறிப்பிட, டேர்டெவில் சொன்னது போல் அடுத்த மாதம் தொடங்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
