சன் டிவி புதுவசந்தம் சீரியலின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது… புகைப்படங்கள் இதோ…

புதுவசந்தம்

சன் தொலைக்காட்சியில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல உள்ளது.

அப்படி நிறைய தொடர்களை கூறலாம், அதில் ஒன்றாக அமைந்தது தான் புதுவசந்தம் சீரியல். கடந்த ஜுலை 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

சன் டிவி புதுவசந்தம் சீரியலின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ... | Pudhu Vasantham Serial Climax Shoot Photos

ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகச் சென்று, அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஷியாம் நாயகனாக நடிக்க, சோனியா சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இவர்களை தாண்டி வைஷ்ணவி, கௌதமி வேம்புநாதம், சாந்தி வில்லியம்ஸ், கோவை உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

சன் டிவி புதுவசந்தம் சீரியலின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ... | Pudhu Vasantham Serial Climax Shoot Photos

கிளைமேக்ஸ்

சமீபத்தில் புதுவசந்தம் சீரியல் 1000 எபிசோடுகளை எட்டிவிட்டது என நடிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

சன் டிவி புதுவசந்தம் சீரியலின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ... | Pudhu Vasantham Serial Climax Shoot Photos

ஆனால் அந்த கொண்டாட்டம் முடிப்பதற்குள் சீரியல் நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு சோக செய்தி வந்தது. அது என்னவென்றால் சீரியல் முடிகிறது என்பது தான்.

தற்போது புதுவசந்தம் சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்டு தொடர் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ,   

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *