பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி கைது.. ரூ. 5 லட்சம் பணம் பறிப்பு
Bigg boss Varshini Venkat arrested by Chennai Police: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வர்ஷினி வெங்கட் என்பவர், இளைஞர் ஒருவரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வர்ஷினி
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இதில், பிக் பாஸ் 8-வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வர்ஷினி வெங்கட். இவர் வைல்டு கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சிக்கு வந்தார். பின் 21 நாட்களில் வெளியேற்றப்பட்டார். இதன்பின் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கைது
இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட், சென்னை கிண்டியில் உள்ள 26 வயது இளைஞரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
குறும்படம் எடுக்க ரூ. முதலீடு செய்யுங்கள் என கூறி பணம் பறித்ததாகவும்; கூடுதலாக ரூ. 27 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் இளைஞர் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
