கணவரை பிரிந்த அயலி சீரியல் நடிகை வித்யா.. 13 வருடங்களுக்கு பின் அதிர்ச்சி முடிவு
சன் டிவியின் வள்ளி, அபியும் நானும் போன்ற் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் வித்யா வினு மோகன். அவர் தற்போது ஜீ தமிழின் அயலி சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை வித்யா மலையாள நடிகர் வினு மோகன் என்பவரை 13 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து
தற்போது வித்யா மற்றும் வினு மோகன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வினு மோகன் இன்ஸ்டாவில் வித்யாவின் அனைத்து போட்டோக்களையும் நீக்கிவிட்டார். அவர்கள் விவாகரத்து செய்வதாக மலையாள மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பிரபல ஜோடி திடீரென விவாகரத்து செய்வது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இருப்பினும் இது பற்றி இருவரும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
