தள்ளிப்போகும் நடிகர் தனுஷின் ஓம் திரைப்படம்… காரணம் என்ன தெரியுமா?


நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் கடினமான உழைப்பும், திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் தனுஷ்.

பல தடைகளை தாண்டி, சவால்களை தாண்டி இப்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ள ஒரு நடிகராக வலம் வருகிறார்.

தள்ளிப்போகும் நடிகர் தனுஷின் ஓம் திரைப்படம்... காரணம் என்ன தெரியுமா? | Actor Dhanush Om Movie Postponed

புதிய படம்


தற்போது தனுஷ், அமரன் பட புகழ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு ஓம் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள அலாக்கா லோவா என பெயரிடப்பட்டுள்ள முதல் பாடல் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது.

தள்ளிப்போகும் நடிகர் தனுஷின் ஓம் திரைப்படம்... காரணம் என்ன தெரியுமா? | Actor Dhanush Om Movie Postponed

வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி இப்படம் வெளியாவதாக இருந்தது, ஆனால் தற்போது படம் தள்ளிப்போகிறதாம். ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கான சில வேலைகளை இன்னும் செய்து முடிக்கவில்லையாம்.

ஆனால் படம் தள்ளிப்போவதும் நல்லது தான் என்றும் பேசப்படுகிறது, காரணம் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ரிலீஸாக உள்ளது. படத்திற்கு படம் மோதாமல் ஓம் தள்ளிப்போனது நல்லது, பாக்ஸ் ஆபிஸில் சோலோவாக கலக்க சரியாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *