முடிவுக்கு வந்த ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ், வின்னர்கள் யார் யார் தெரியுமா?
டான்ஸ் ஜோடி டான்ஸ்
தமிழ் சின்னத்திரையில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் ஒரு நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீ தமிழில் கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக இந்த நடன நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில் இப்போது 4வது சீசனும் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் 3வது சீசன் பைனல் நிகழ்ச்சி நடக்கவே இல்லை, காரணம் கொரோனா நோய் தொற்று பிரச்சனையால் நின்றுவிட்டது.
பின் சில வருடங்கள் கழித்தே 4வது சீசன் துவங்கப்பட்டது, 2026, கடந்த ஜுன் 13ம் தேதி துவங்கப்பட்ட இந்த ஷோ தற்போது முடிந்துவிட்டது.
வெற்றியாளர்கள்
இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை ஜெயித்துள்ளார்கள் கோமதி மற்றும் கெனி ஜோடி.
முதல் ரன்னர் அப்பாக நிகிதா மற்றும் நவீனும், 2வது ரன்னர் அப்பான அருணிமா மற்றும் அபிஷேக் ஜெயித்துள்ளனர்.
