சிபிராஜ் மகன் செய்த சாதனை.. குவியும் வாழ்த்து
நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக மட்டுமின்றி மல்டிஸ்டாரர் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
சிபிராஜ் தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அப்பா சத்யராஜ் மற்றும் சகோதரி இருவரும் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கடந்த தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து பதிவிடும் விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.
சிபிராஜ் தற்போது அவரது மகன் செய்த சாதனை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
தங்க பதக்கம்
சர்வதேச பள்ளிகளுக்கு இடையேயான ISSO Games 2026-27ல் அவரது மகன் டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் பெற்று இருக்கிறார்.
மும்பையின் Dhirubhai Ambani International Schoolல் இந்த போட்டிகள் நடந்து இருக்கிறது.
போட்டோக்களை வெளியிட்டு சிபிராஜ் மகன் வெற்றி பெற பயிற்சி அளித்தவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
