விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

Youtuber and Dayangaram movie Director Vj Siddhu blessed with baby girl: பிரபல யூடியூபரும் டயங்கரம் திரைப்படத்தின் இயக்குநருமான விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.


விஜே சித்து


பிராங்க் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்து. குறிப்பாக பிஜிலி ரமேஷின் பிராங்க் வீடியோ பட்டி தொட்டி எங்கும் வைரலானது. இதன்பின் பிராங்க் செய்வதில் இருந்து விலகி, தனது குழுவுடன் Vlog செய்ய தொடங்கினார்.

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ | Vj Siddhu Blessed With Baby Girl

விஜே சித்து Vlogs என தனியாக யூடியூப் சேனலை தொடங்கி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். தற்போது இவருடைய சேனலுக்கு 6 மில்லியன் subscribers உள்ளனர். மேலும், இவர் ஒரு வீடியோ அப்லோட் செய்தால் 24 மணி நேரத்திலேயே மில்லியன் கணக்கான Views வருகிறது.

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ | Vj Siddhu Blessed With Baby Girl


டயங்கரம்


யூடியூப்பில் நம்பர் 1 இடத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் விஜே சித்து கடந்த ஆண்டு தனது ‘டயங்கரம்’ திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் மூலம் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ | Vj Siddhu Blessed With Baby Girl


குடும்பம்


விஜே சித்துவிற்கு ஷாலினி என்கிற மனைவியும், இனியாழ் என்கிற மகளும் உள்ளனர். அவர்களை அவ்வப்போது விஜே சித்து Vlogs வீடியோக்களிலும் காண்போம். இனியலுக்கு தனியாக Ini vlogs என்கிற சேனல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ | Vj Siddhu Blessed With Baby Girl


இரண்டாவது குழந்தை


இந்த நிலையில், விஜே சித்து – ஷாலினி தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முகத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஜே சித்து. மேலும், இந்த பதிவில் ‘இனியாழ் 2.O இன்னொரு தேவதை…” என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சித்துவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *