ஜீவா மீனாட்சி பிரிக்க வந்த பெண்.. நடந்தது என்ன?
வாகை சூடவா
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நடந்த பிரச்சனையில் ஜீவா அரியரை கிளியர் செய்வதாக வாக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அப்பத்தா நானே ஒரு டீச்சரை ஏற்பாடு செய்தேன் என்று சொல்லி ஒரு பெண்ணை ஏற்பாடு செய்கிறார். பிளாஷ்பேக்கில் வாசுதேவன் ஏற்பாடு செய்த டீச்சர் தான் அந்த பெண் எனவும் ஜீவா மீனாட்சி பிரிப்பதற்காக அனுப்பப்பட்டவர் என்பதும் தெரிய வருகிறது.
இதனால் அப்பத்தாவின் அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்து இரண்டு பேரையும் பிரிக்கிற வேலையை நீ பார்த்துக்கோ என்று சொல்கிறார். அப்பத்தா வாண்டடாக இப்படி ஒரு விஷயம் செய்வதை நினைத்து மீனாட்சிக்கு சந்தேகம் கிளம்புகிறது.
பிறகு டீச்சராக வந்த பெண் சிவாவை ரூமுக்குள் அழைத்துச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பது போல அவனுடன் நெருங்கி பழக அதை பார்த்து மீனாட்சி பொசசிவ் கலந்த கடுப்பாகிறாள்.
இதை நோட்டமிட்ட ஜீவா மீனாட்சியை மேலும் பொசசிவாக்க அந்த டீச்சர் உடன் நெருங்கி பழக மீனாட்சியை அவன் பாக்கெட்டில் தாலி ஒன்றை வைத்து விட்டு கிளம்பி செல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
