மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதனின் புதிய தொடர்… நாயகி மற்றும் சீரியல் பெயர், வெளிவந்த தகவல்


சுவாமிநாதன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சுவாமிநாதன்.

கன்னட சினிமாவில் கலக்கிவந்தவருக்கு தமிழில் முதல் சீரியலே பெரிய ரீச் கொடுத்தது. அந்த சீரியல் முடிந்த கையோடு விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.

இந்த சீரியல் சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது, சீரியல் நாயகர்கள் என்றாலே முதலில் சுவாமிநாதன் பெயரை சொல்லும் அளவிற்கு கொண்டாடப்பட்டார்.

மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதனின் புதிய தொடர்... நாயகி மற்றும் சீரியல் பெயர், வெளிவந்த தகவல் | Swaminathan New Serial Name And Actress Details


புதிய தொடர்

மகாநதி சீரியல் முடிந்த பிறகு அவர் என்ன தொடர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

இந்த நிலையில் சுவாமிநாதன் விஜய் டிவியிலேயே சீரியல் கமிட்டாகி இருக்கிறார் என தெரியவந்த நிலையில் நாயகி மற்றும் பெயர் பற்றிய தகவல் வந்துள்ளது. சுவாமிநாதன் ஹீரோவாக நடிக்க கிருத்திகா நாயகியாக நடிக்க உள்ளாராம்.

தொடருக்கு கோமதி ஷங்கர் என பெயரிட்டுள்ளனராம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *