சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி… ஸ்பெஷல் பதிவு


சின்ன மருமகள்

விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அழகே அழகு, சின்ன மருமகள், கண்மணி அன்புடன் என நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிறைய சீரியல்கள் 2, 3, 4 வருடங்கள் என ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி இருக்கிறது.

சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி... ஸ்பெஷல் பதிவு | Chinna Marumagal Serial Team In Celebration Mode

குட் நியூஸ்


விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள தொடர் தான் சின்ன மருமகள்.

குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க ஆசைப்படும் தமிழ்ச்செல்வி சேது என்பவரை திருமணம் செய்து படு கஷ்டத்தையே இந்த தொடர் இதுவரை காட்டி வருகிறது.

இதற்கு இடையில் அவ்வப்போது தமிழ்ச்செல்வி மருத்துவர் ஆக வேண்டும் என போராடும் காட்சிகள் இடம்பெறும். கடைசியாக சேது-தமிழ்ச்செல்வி மகன்-மகளின் காது குத்தும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்காக விஜய் டிவி ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளனர். அதாவது இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்க 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *